பஞ்சாபில் பரபரப்பு… சுக்பீர் சிங் பாதல் வாகனத்தை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்..

 

பஞ்சாபில் பரபரப்பு… சுக்பீர் சிங் பாதல் வாகனத்தை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்..

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் வாகனத்தை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தின் ஜலாலாபாத் நகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், பெரோஸ்பூரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான சுக்பீர் சிங் பாதல் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தனது கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதை காண ஜலாலாபாத் நகராட்சிக்கு வந்தார். அதேநேரத்தில் ஜலாலாபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமிந்தர் அவ்லாவின் மகன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

பஞ்சாபில் பரபரப்பு… சுக்பீர் சிங் பாதல் வாகனத்தை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்..
சேதமடைந்த கார்

இரு கட்சியினரும் அங்கு சந்தித்து கொண்டபோது வாய் தகராறு வெடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் பாதலின் வாகனததை சுற்றி வளைத்தனர். இது வன்முறை மோதலை தூண்டியது. இதனையடுத்து இரண்டு கட்சியினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கினர். சுக்பீர் சிங் பாதலின் கார் தாக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் பரபரப்பு… சுக்பீர் சிங் பாதல் வாகனத்தை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்கள்..
ஹர்சிம்ரவுத் கவுர் பாதல்

இதனையடுத்து போலீசார் கும்பலை கலைக்க தடியடி மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. சிரோன்மணி அகாலி தள எம்.பி. ஹர்சிம்ரவுத் கவுர் பாதல் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், குண்டர்கள் பஞ்சாப்பை ஆட்சி செய்து வருவதாகவும், மாநிலத்தில் குண்டா ராஜ் உள்ளது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்க உரிமை இல்லை. ஏனெனில் இசட்-ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு நபர் கூட இது போன்று தாக்கப்படும நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளது என்று தெரிவித்தார்.