கேரளாவில் 21 வயது பெண் மேயர்- 2006-லேயே தமிழகத்தில் 24 வயதில் மேயரான பெண் இவர்தான்!

கேரளாவில் 21 வயது பெண் மேயர்- 2006-லேயே தமிழகத்தில் 24 வயதில் மேயரான பெண் இவர்தான்!

நேற்று முழுக்க சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக இருந்தவர் ஆர்யா ராஜேந்திரன். யார் இவர் என்று தேடியவர்களே அதிகம்.

சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடது முன்னணி 5 மாநகராட்சிகளையும் 36 நகராட்சிகளையும், 10 மாவட்ட பஞ்சாயத்துகளையும் 108 ஒன்ரிய பஞ்சாயத்துகளையும், 515 கிராம பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் கம்யூனிஸ்ட் கூட்டனி 52 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. அதனால், அதன் மேயராக ஆர்யா ராஜேந்திரன் எனும் 21 வயது பெண் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரே இந்தியாவின் மிக இளவயது பெண் மேயராவார்.

கேரளாவில் 21 வயது பெண் மேயர்- 2006-லேயே தமிழகத்தில் 24 வயதில் மேயரான பெண் இவர்தான்!

திருவனந்தபுரத்தின் முடவன்முகன் எனும் வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். இவர் குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்டது அல்ல. இவரின் அப்பா எலக்ட்ரிசியன் வேலை பார்ப்பவர். அம்மா, எல்.ஐ.சி. ஏஜண்ட்.

இந்தியாவின் மிக இளவயது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆர்யா ராஜேந்திரன். இதற்கான பாராட்டுகள் இன்னும் குவிந்து வருகிறது. சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2006 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் 24 வயதில் ஒரு பெண் மேயரானார்.

கேரளாவில் 21 வயது பெண் மேயர்- 2006-லேயே தமிழகத்தில் 24 வயதில் மேயரான பெண் இவர்தான்!

2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரேகா பிரியதர்ஷினி. அப்போது அவருக்கு வயது 24. கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா திமுக கட்சியைச் சேர்ந்தவர். தற்போதும் அக்கட்சியில் தீவிர செயற்பாட்டில் இயங்கி வருகிறார்.

கேரளாவில் 21 வயது பெண் மேயர்- 2006-லேயே தமிழகத்தில் 24 வயதில் மேயரான பெண் இவர்தான்!

சேலம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ரேகா பிரியதர்ஷினி என்பது இன்னொரு சிறப்பு. இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நேற்று ஆர்யா ராஜேந்திரன் மேயரான செய்திகள் வைரலானதும், திமுகவினர் ரேகா பிரியதர்ஷினி பற்றிய செய்திகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.