kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


குழந்தை வரம் அருளும் சஷ்டி விரதம்… இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!

முருகன்
முருகன்
Loading...

‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்று பழமொழிகளை தப்புத் தப்பாய் கற்றறிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் அது, `சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பது தான். அதாவது முருகனுக்கு உகந்த சஷ்டி தினத்தில் விரதம் இருந்தால் கர்ப்ப்பம் தங்கும் என்பது அனுபவ மொழி.

god

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது சஷ்டி. இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை துதித்து வந்தால் அவர்களின் மன மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும். இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் மற்றவர்களும் இந்த விரதத்தை தாராளமாக கடைப்பிடிக்கலாம். காலையில் நீராடி பூரண கும்பம் வைக்க வேண்டும்.

god

பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்க வேண்டும். காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து “கந்த சஷ்டி கவசத்தையோ’வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதுள் ஓம் முருகா என்று ஜெபிக்கலாம். இந்த சஷ்டி விரத தினத்தன்று புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள், மூன்று வேளை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஓன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைப்பிடித்து வரலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினத்தில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் காலையில் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

2018 TopTamilNews. All rights reserved.