கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உறுதியானது. இதனையடுத்து 55 வயதான அமித் ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது தொடர்பாக அமித் ஷா டிவிட்டரில், பரிசோதனையில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. எனது உடல் நலம் நன்றாக உள்ளது ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அமித் ஷா தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருப்பதை காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் டிவிட்டரில், ஆச்சரியம் ஏன் நமது உள்துறை அமைச்சர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதை தேர்வு செய்யவில்லை ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

பொது மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமானால் அரசு நிறுவனங்களுக்கு சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு தேவை என பதிவு செய்து இருந்தார். அரசாங்க பதவிகள் இருப்பவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அரசு மருத்துவமனைகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.