இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்… கமல்ஹாசனின் யோசனையை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்… கமல்ஹாசனின் யோசனையை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் யோசனையை நான் வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் இது தொடர்பாக டிவிட்டரில், இல்லத்தரசிகளுக்கு மாதந்திர ஊதியத்தை மாநில அரசு செலுத்துவதுடன், வீட்டு வேலைகளை சம்பள தொழிலாக அங்கீகரிக்கும் என்ற கமல்ஹாசின் யோசனையை நான் வரவேற்கிறேன். இது சமுதயாத்தில் இல்லரத்தரசிகளின் சேவைகளை அங்கீகரித்து பணமாக்கும், அவர்களின் சக்தி மற்றும் சுயாட்சியை மேம்படுத்தும் மற்றும் உலகளாவிய அடிப்படை வருமானத்தை உருவாக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்… கமல்ஹாசனின் யோசனையை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்
சசி தரூர்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடும்பத்தை கட்டி காக்கும் இல்லத்தரசிகளுக்கு கணவர் மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்று புதிய யோசனை முன்வைத்தார். மேலும், வேலைக்கு செல்லாமல் வீட்டை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு கணவர் சம்பளம் கொடுக்க வேண்டும். இது எப்படி சாத்தியம். அம்மாவுக்கும், மனைவிக்கும் எப்படி சம்பளம் தருவது என்று சிரிப்பார்கள். ஆனால் இத முடியும். நடக்க வேண்டிய விஷயம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம்… கமல்ஹாசனின் யோசனையை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்
பெண்

மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்வரும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது கட்சியின் ஏழு அம்ச செயல்திட்டத்தில், வீட்டை நிர்வாகம் செய்யும் இல்லத்தரசிகளுக்கு அவர்களின் வீட்டு வேலைகளுக்கு மாத ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.