காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கொரோனா..

 

காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கொரோனா..

காங்கிரஸ் எம்.பி.க்கள் சதி தரூர் மற்றும் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள எம்.பி.யுமான சசி தரூர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அடுத்து முன்றாவது தலைவராக சசி தரூர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் சசி தரூர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ள போதிலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கொரோனா..
ராகுல் காந்தி

இது தொடர்பாக சசி தரூர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பரிசோதனை சந்திப்புக்காக இரண்டு நாட்களும், முடிவுக்காக இன்னொரு ஒன்றரை நாட்களும் காத்திருந்த பின், இறுதியாக எனக்கு உறுதிப்படுத்தல் உள்ளது.நான் கோவிட் பாசிட்டிவ். இதை ஓய்வு, தனிமைப்படுத்துதல் மற்றும் ஏராளமான திரவங்களுடன் ஒரு நேர்மறையான எண்ணத்துடன் சமாளிக்க முடியும் என நம்புகிறேன், ஓய்வு, என் சகோதரி மற்றும் 85 வயதான தாயாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கொரோனா..
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

கலிபோர்னியாவில் உள்ள என் சகோதரி பைசர் தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்டார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நானும், என் அம்மாவும் கடந்த 8ம் தேதியன்று எங்களது இரண்டாது டோஸ் கோவிஷீல்ட் (கொரோனா தடுப்பூசி) போட்டுக் கொண்டோம். எனவே தடுப்பூசிகளால் தொற்றுநோயை தடுக்க முடியாது என்றாலும், அவை கொரோனா வைரஸ் தாக்கத்தை மிதப்படுத்தும் என்று நம்புவதற்கு நமக்கு எல்லா காரணங்களும் உள்ள என பதிவு செய்து இருந்தார். மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.