மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் எங்க கூட்டணி இணைந்து போட்டியிடும்.. சரத் பவார்

மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் எங்க கூட்டணி இணைந்து போட்டியிடும்.. சரத் பவார்

மகாராஷ்டிராவில் எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட தேர்தல்களில் எங்களது மகா விகாஷ் அகாதி கூட்டணி இணைந்து போட்டியிடும் என்று சரத் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கி நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழாவை அந்த கட்சியினர் கொண்டாடினர். இந்த விழாவில் அந்த கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டார். அப்போது சரத் பவார் பேசுகையில் கூறியதாவது: மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு தனது 5 ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்.

மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் எங்க கூட்டணி இணைந்து போட்டியிடும்.. சரத் பவார்
சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

மகாராஷ்டிராவில் அடுத்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகராஷ்டிராவில் தற்போது முதல்வா உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் எங்க கூட்டணி இணைந்து போட்டியிடும்.. சரத் பவார்
பா.ஜ.க.

2019ல் நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்க்ப்பட்ட நிலையில்,சிவ சேனா ஆட்சியில் பங்கு கேட்டது. ஆனால் அதற்கு பா.ஜ.க. மறுத்து விட்டது. இதனால் யாரும் எதிர்பாராத வகையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவ சேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம் நடந்து வருகிறது. கூட்டணிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தாலும் கடந்த ஒராண்டுக்கு மேலாக கூட்டணி அரசாங்கம் நடந்து கொண்டு இருக்கிறது.