கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்

 

கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்

நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு நடவடிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சரத் பவார் பின்பு மும்பை மாநகராட்சி இடிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பையில் ஒரு அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் சட்டவிரோத கட்டிடம் என்று கூறி மும்பை மாநகராட்சி அதனை இடித்தது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலக இடிக்கப்பட்டது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முதலில் தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் ஏராளமான சட்டவிரோத கட்டமைப்புகள் உள்ளன. தேவையில்லாமல் இந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் மக்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பார்கள் என தெரிவித்தார்.

கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்
சரத் பவார்

முதலில் நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்புக்கு எதிராக பேசி சரத் பவார் அடுத்த சில மணி நேரங்களில் மும்பை மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பேசியுள்ளார். சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கங்கனா ரனாவத் அலுவலகம் தொடர்பாக எந்த விவரமும் எனக்கு தெரியாது. ஆனால் அது அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என செய்திதாளை படித்து தெரிந்து கொண்டேன். இருப்பினும், மும்பைக்கு அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் ஒன்றும் புதிதல்ல. மும்பை முனிசபல் கார்ப்பரேஷன் சட்டப்படி செயல்பட்டால், அப்பம் அது சரி என தெரிவித்தார்.

கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

இந்நிலையில் நேற்று மாலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அலுவலக குடியிருப்பில் மகா விகாஸ் கூட்டணி கட்சிகளின் சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய விஷயத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒதுங்கி இருக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.