டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் திடீர் ஆலோசனை.. எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த சரத் பவார்

 

டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் திடீர் ஆலோசனை.. எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த சரத் பவார்

டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தேர்தல் ஆலோசகர் மற்றும் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த வாரம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் திடீர் ஆலோசனை.. எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த சரத் பவார்
பிரதமர் நரேந்திர மோடி

இந்த சூழ்நிலையில் டெல்லியில் நேற்று சரத் பவாரும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தலிலும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை ஆய்வு செய்ய, சரத் பவார் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சார்பாக நாளை (இன்று) நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நேற்று அழைப்பு அனுப்பப்பட்டது. ஆர்.ஜே.டி. தலைவர் மனோஜ் ஜா, ஆம் ஆத்மி சஞ்சய் சிங், காங்கிரசின் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல். ஆனால் காங்கிரசுக்கு அழைப்பு சேரவில்லை என முதலில் தகவல் வந்தது.

டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் திடீர் ஆலோசனை.. எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த சரத் பவார்
பிரசாந்த் கிஷோர்

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இது தொடர்பாக கூறியதாவது: ஒரு ஜனநாயகத்தில் அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை செய்ய உரிமை உண்டு. நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம். ஆனால் காங்கிரஸ் இல்லாமல் எந்த முன்னணியும் இருக்க முடியாது. பவர் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. பவார் மூன்றாவது முன்னணியை அமைக்க முயற்சி செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சரத் பவார் தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு சவால் விடும் ஒரு கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பான பேச்சுக்கள் தவிர, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிற உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஒரு மாற்று சக்தியை அபிவிருத்தி செய்வதற்கும் இன்றைய சந்திப்பு ஒரு ஆய்வு பயிற்சிக்கு உதவும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.