முடிவு எடுப்பதற்கு முன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை பண்ணுங்க…. உத்தவ் தாக்கரேவிடம் சரத் பவார் காட்டம்

முடிவு எடுப்பதற்கு முன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை பண்ணுங்க…. உத்தவ் தாக்கரேவிடம் சரத் பவார் காட்டம்

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் கொரேனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமான நிலையில் உள்ளது. இந்நிலையில் தொற்று நோய் பரவுவதை தவிர்க்க, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஜூலை 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தார்.

முடிவு எடுப்பதற்கு முன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை பண்ணுங்க…. உத்தவ் தாக்கரேவிடம் சரத் பவார் காட்டம்

லாக்டவுன் நீட்டிப்பு முடிவை, கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் உத்தவ் தாக்கரே தன்னிச்சையாக எடுத்ததாக தெரிகிறது. இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளக்கிழமையன்று முதல்வர் தாக்கரேவை சரத் பவார் திடீரென சந்தித்து பேசினார்.

முடிவு எடுப்பதற்கு முன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை பண்ணுங்க…. உத்தவ் தாக்கரேவிடம் சரத் பவார் காட்டம்

அப்போது. உத்தவ் தாக்கரேவிடம், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்யும்படியும் இல்லையென்றால் அது தவறான சிக்னல்களை வெளிபடுத்தும். அறிவுரை வழங்குபவர்களிம் ஆலோசனை செய்வதை காட்டிலும் சக அமைச்சர்களிடம் அதிகம் ஆலோசனை மேற்கொள்ளும்படி சரத் பவார் வலியுறுத்தியுள்ளார். அதற்கு, இனி கூட்டணி கட்சிகள் இடையே மேலும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதாக உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி வலுவாக இருக்கிறது என சிவ சேனா கூறினாலும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒரு கொதிப்பு இருந்துதான் கொண்டு இருக்கிறது என்பதை சரத் பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.