வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருங்க… சச்சினுக்கு ப்ரீ அட்வைஸ் வழங்கிய சரத் பவார்

 

வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருங்க… சச்சினுக்கு ப்ரீ அட்வைஸ் வழங்கிய சரத் பவார்

வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருங்க என்று சச்சின் டெண்டுல்கருக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் மீது சர்வதேச வெளிச்சம் பட தொடங்கியுள்ளது. பிரபல சர்வதேச பாப் பாடகி ரிஹானா இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட் செய்தார். இதற்கு பதிலடியாக பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.

வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருங்க… சச்சினுக்கு ப்ரீ அட்வைஸ் வழங்கிய சரத் பவார்
ரிஹானா

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்குதான் இந்தியா தெரியும், இந்தியாவுக்காக முடிவு செய்ய வேண்டும், ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்கும் என்று பதிவு செய்து இருந்தார். சச்சின் இந்த டிவிட்டில் விவசாயிகளுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை, வெளிநாட்டவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து சொல்லக்கூடாது என்று ரீதியில்தான் கருத்தை பதிவு செய்து இருந்தார்.

வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருங்க… சச்சினுக்கு ப்ரீ அட்வைஸ் வழங்கிய சரத் பவார்
சரத் பவார்

ஆனால் சச்சின் என்னவோ விவசாயிகளுக்கு எதிரானவர் என்பது போல் சித்தரிக்கப்பட்டு, அவரை பல்வேறு தரப்பினரும் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சச்சின் விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், வேறு துறையை பற்றி பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சச்சினுக்கு அறிவுறுத்துகிறேன். பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் நிதின் கட்கரி போன்ற அரசாங்கத்தின் மூத்த தலைவர்கள் முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேசினால் ஒரு தீர்வை காணலாம். அதேசமயம் மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டால், விவசாயிகளும் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.