ராகுல் காந்திக்காக மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்….. காங்கிரஸ் தலைவர் தகவல்

ராகுல் காந்திக்காக மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்….. காங்கிரஸ் தலைவர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பெரிய விவாதம் நடந்து கொண்டு இருக்கும் வேளையில், ராகுல் காந்திக்கு வழிவிடும் நோக்கில், மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சங்க்திசிங் கோவில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ராகுல் காந்திக்காக மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்….. காங்கிரஸ் தலைவர் தகவல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் ராகுல் காந்தி பிரதமராக வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பிரதமராக பொறுப்பேற்று கொள்ளுங்கள் நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்ற மன்மோகன் சிங்கின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது பதவி காலத்தை நிறைவு செய்யும்படி ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

ராகுல் காந்திக்காக மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்….. காங்கிரஸ் தலைவர் தகவல்

தனது குடும்பத்தினர் போல் ராகுல் காந்தி ஒருபோதும் எந்த அதிகாரம் அல்லது பதவிக்கு வேட்டையாடவில்லை. காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஆனால் இது தொடர்பான இறுதி முடிவை காங்கிரஸ் செயற்குழு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தங்களது குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் யார் என்பதை கட்சியும், செயற்குழுவும் தான் முடிவு செய்யும் என சங்க்திசிங் கோவில் கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.