“சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுவேன்” – புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி!

“சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுவேன்” – புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி!

ஆட்சி மாற்றம் நடந்தவுடனே அதிகார மட்டத்திலும் மாற்றங்கள் அடுத்தடுத்து அதிரடியாக நடந்துகொண்டிருக்கின்றன. காலையில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்க, மாலையில் தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். மதியம் தனிச்செயலர்களாக உதயசந்திரன், அனுஜார்ஜ், உமாநாத், எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டனர். இரவு ஏடிஜிப்பிக்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அதன்படி சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த மகேஷ் அகர்வால் இடமாற்றப்பட்டு, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

“சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுவேன்” – புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி!

இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார் சங்கர் ஜிவால். அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் சென்னை மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளேன். தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு எதிராகக் காவலர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் செயல்படுகிறார்கள். அடுத்தக்கட்ட முன்னுரிமை முதல்வரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வண்ணம், முதல்வரின் சிறந்த ஆட்சிக்கு உதவும் வண்ணம் செயல்படுவோம்.

“சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்டுவேன்” – புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி!

சென்னை காவல்துறை சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஊரடங்கில் பொதுமக்கள் வெளியில் வருவார்கள், அவர்களிடம் கடுமையாக நடக்க முடியாது. அவர்களுக்கு அறிவுரை சொல்லி வெளியில் வருவதை கட்டுப்படுத்துவோம். ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க தடையில்லை. ஆன்லைன் மூலம் தாராளமாக புகார் அளிக்கலாம்” என்றார்.