“உங்களை மிஸ் செய்வோம் ரெய்னா” : ஷேன் வாட்சனின் வீடியோ பதிவு!

 

“உங்களை மிஸ் செய்வோம் ரெய்னா” : ஷேன் வாட்சனின்  வீடியோ பதிவு!

ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே 3 முறை ஐபிஎல் கோப்பையை தட்டி சென்ற சென்னை அணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால் சென்னை அணி துபாயில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னை அணியில் வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

“உங்களை மிஸ் செய்வோம் ரெய்னா” : ஷேன் வாட்சனின்  வீடியோ பதிவு!

இதை தொடர்ந்து ஐ.பி.எல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார் என்றும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் , பதிவிட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் வாட்சன், “நான் உங்களை நினைத்து கொண்டிருக்கிறேன். சென்னை அணி உங்களை கண்டிப்பாக மிஸ் செய்யும். நீங்கள் அணியின் இதயத்துடிப்பாக இருந்துள்ளீர்கள். அதனால் உங்களை நிச்சயம் நாங்கள் பெருமைப்படுத்துவோம். உடல் ஆரோக்கியதுடன் பாதுகாப்பாக இருங்கள்”என்று கூறியுள்ளார்.