`ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது!’ – ஆதரவு கரம் நீட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 

`ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது!’ – ஆதரவு கரம் நீட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்களை பொதுஉடமை ஆக்க வேண்டும் என காரல் மார்க்சு சொன்னதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்வளவு கீழ்த்தரமாக கருத்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் விட மாட்டோம். தமிழகத்தில் தேவதாசி முறை குறித்து உங்களது கருத்து என்ன ? இது உங்கள் தத்துவம் இல்லையா என்று குருமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். காரல் மார்க்சு பெண்களை பொதுஉடமை ஆக்க வேண்டும் என்று எழுதியதாக காண்பிக்க முடியுமா?.

பாஜக உள்ளிடவர்களின் கருத்துகளை சட்ட ரீதியாக சந்திக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தைரியம் இருந்தால் நேரிடையாக விவாதிக்க தயாரா ? குருமூர்த்தி அரசியல் தரகு வேலை செய்பவர். நாங்கள் கொள்கைக்காக வாழ்பவர்கள். ராஜபாளையத்தில் மக்கள் மருத்துவர் சாந்தி லால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் இல்லாமல் உயிரிழந்துள்ளார். செயற்கை சுவாச கருவிகள் எத்தனை உள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு கொடுக்க வேண்டும். சீனா ,கியூபாவை போல் வசதிகள் இங்கில்லை.

`ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது!’ – ஆதரவு கரம் நீட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கொரோனா காலத்தில் சாப்பிட்டிற்கே வழியில்லாமல் நகர்புற எழைகள் மிகவும் கடினமான சூழலில் உள்ளனர். இதனை அரசு கருத்தில் கொள்ளவேண்டும் , குறைந்தது 7-10ஆயிரம் ருபாய் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா, இல்லை பிரதமர் மோடி முக்கியமா என்பதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மை காலத்தில் எல்லா இடங்களில் வகுப்பு வாத சூழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதுதான் ஏ.ஆர்.ரகுமானுக்கு நடந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது. மிகவும் அமைதியானவர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் இப்படி பேசியிருப்பார். அவருக்கு கலையை தவிர ஒன்றும் தெரியாது. அவருக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று கூறினார்.