“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

 

“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதில் நடிகை ஷாலு ஷம்முவும் ஒருவர்.

“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

நடிகை ஷாலு ஷம்மு, மீரா மிதுன் பித்து பிடித்து சுற்றுவதாகவும், வீண் விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் மீரா மிதுன் ஷாலு ஷம்முவுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார்.

“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார் அளித்துள்ளார். மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாகவும், அவரின் தூண்டுதலின் பேரில் பலரும் போனில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ள அவர், மீரா மிதுனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.