ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற செய்தியே இல்லாமல் செய்த சக்திகந்த தாஸ்.. கவர்னராக 3வது ஆண்டில்

 

ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற செய்தியே இல்லாமல் செய்த சக்திகந்த தாஸ்.. கவர்னராக 3வது ஆண்டில்

ரிசர்வ் வங்கி கவர்னராக சக்தி கந்த தாஸ் 3வது ஆண்டில் நாளை (டிசம்பர் 11) அடியெடுத்து வைக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற செய்தியே இல்லாமல் பார்த்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவி காலம் முடிவடைதற்கு முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் 2018 டிசம்பர் 10ம் தேதி கவர்னர் பதவியிலிருந்து விலகினார். இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சக்திகந்த தாஸை மத்திய அரசு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு தேர்ந்தெடுத்தது.

ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற செய்தியே இல்லாமல் செய்த சக்திகந்த தாஸ்.. கவர்னராக 3வது ஆண்டில்
உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கி வங்கியுடான உறவுகளை சரிசெய்ய மத்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருமித்த வேட்பாளர் என்று சொன்னாலும் தவறல்ல. ரிசர்வ் வங்கியின் கவர்னராக டிசம்பர் 11ம் தேதியன்று சக்திகந்த தாஸ் பொறுப்பேற்றார். அதுமுதல் இதுவரை ரிசர்வ் வங்கிக்கும்,மத்திய அரசுக்கும் இடையே எந்தவித மோதல் போக்கு அல்லது பிரச்சினையோ ஏற்பட்டது கிடையாது. கவர்னர் சக்திகந்த தாஸின் துணை கவர்னர்களும் எந்தவொரு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது கிடையாது. இதற்கு முன்பு கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் அரசியல், சமூக விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இது மத்திய அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற செய்தியே இல்லாமல் செய்த சக்திகந்த தாஸ்.. கவர்னராக 3வது ஆண்டில்
ரகுராம் ராஜன்

உண்மையில், சக்திகந்த தாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல் என்ற தலைப்பு செய்தி, தலைப்பு செய்திகளிலிருந்து மறைந்து விட்டது என்றே சொல்லலாம். இந்த இரண்டு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியும், அரசாங்கமும் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரே பக்கத்தில் உள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகந்த தாஸ் பணியை சிறப்பாக செய்து வருகிறார். உதாரணமாக யெஸ் பேங்க், லட்சுமி விலாஸ் வங்கிகளை எந்தவித தாமதமும் இன்றி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் மற்றும் அவரது குழு மீட்டது.