Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் புற்றுநோய் செல்களை அழிக்கும் சப்பாத்திக் கள்ளி!

புற்றுநோய் செல்களை அழிக்கும் சப்பாத்திக் கள்ளி!

சப்பாத்திக் கள்ளி… இது வறண்ட நிலங்களிலும் சாலையோரங்களிலும் காணப்படும் ஒருவகை முள்செடி. இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தியைப் போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என செழித்து வளரும் இந்த மூலிகைச் செடியில் ஆங்காங்கே முட்கள் காணப்படுவதால் ஆடு,மாடுகள் நெருங்காது. ஆகவே கிராமப்புறத்து வயல் வெளிகள், நகர்ப்புறத்து தோட்டங்கள், வேலிகளில் வளர்ப்பார்கள். மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும்; ரோஸ் மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் பழங்கள் பழுக்கும்.


அல்சைமர்:
கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துகளும் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாகத் திகழும் சப்பாத்திக் கள்ளி, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக பெரிதும் உதவிபுரியும். `அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி நோய்க்கு இது சரியான மருந்தாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோயைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கவும் ஒரு மெய்க்காப்பாளனாக விளங்குகிறது சப்பாத்திக்கள்ளி.

சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள அஸ்கார்பிக் என்ற அமிலம் நம் உடலில் இருக்கும் நல்ல செல்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜனைக் கொண்டு செல்லும். அதேநேரத்தில் புற்றுநோய் செல்களுக்கு செல்லும் ஆக்சிஜனை தடை செய்து புற்றுநோய் செல்களை அழித்துவிடும். உடலில் வரும் அனைத்துவிதமான கட்டிகளையும் கரைத்துவிடும்.


மெனோபாஸ்:
சப்பாத்திக் கள்ளி பழம் வெயிலில் ஏற்படும் நாவறட்சியைப் போக்கும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் போக்கும். சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்து உடல்பருமனைக் குறைக்க பெரிதும் உதவும். பழத்தை நன்றாகப் பசையாக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி உள்ள இடத்தில் பூசினால் சீக்கிரம் குணம் தெரியும். பழத்தைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம், இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பார்வைக் குறைபாட்டைப் போக்குவதுடன் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பூச்சிக்கடி, வண்டுக்கடி விஷத்தை நீக்கும்.

சப்பாத்திக் கள்ளியை முள் நீக்கி சுத்தம் செய்து பசையாக்கி 20 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சூடாக மலம் வெளியேறுவது, மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். இதன் பழச்சாற்றில் மணப்பாகு செய்து சாப்பிட்டால் கோடை கால நோய்கள் நீங்கும்.

சப்பாத்திக் கள்ளியின் தண்டுப் பகுதியும்கூட நல்ல மருந்துதான். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சப்பாத்திக் கள்ளியின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பூசினால் குணம் கிடைக்கும். பூக்களை நசுக்கி கட்டிகளின்மீது கட்டிவந்தால் கட்டிகள் உடைந்து குணம் கிடைக்கும்.

Most Popular

சூடுபிடிக்கும் 2ஜி வழக்கு – தோல்வி பயத்தில் திமுக

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல் வழக்கை வரும் அக்டோபர் 5 முதல் தினந்தோறும் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘’தேர்தல் நெருங்கும் நிலையில் மறுபடியுமா!’’...

5 இயக்குநர்களின் குறும்படங்கள் “புத்தம் புது காலை” ஓடிடியில் வெளியாகிறது!

தமிழில் 5 இயக்குநர்கள் இயக்கியுள்ள புத்தம் புது காலை என்ற 5 குறும்படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சுஹாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ்...

மொத்த பாதிப்பு 3.38 கோடி – உலகளவில் கொரோனா நிலவரம்

கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது.. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

14 ஆவது ஊதிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!