`உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; பாலியல் டார்ச்சர் !;’- விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற தூய்மைப் பணியாளர்

 

`உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; பாலியல் டார்ச்சர் !;’- விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற தூய்மைப் பணியாளர்

தூய்மைப் பணியாளரிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பேரூராட்சி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

`உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; பாலியல் டார்ச்சர் !;’- விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற தூய்மைப் பணியாளர்

கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக ராதிகா (பெயர் மாற்றம்) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பேரூராட்சியில் ஓட்டுநராக ராஜதுரை என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி ராதிகாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜதுரை, ராதிகாவிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ராதிகா புகார் அளித்துள்ளார். ஆனால் ராஜதுரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராதிகா வேதனையில் இருந்துள்ளார். இதனிடையே, ராஜதுரை மீண்டும் ராதிகாவிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த ராதிகா, வீட்டில் வைத்து விஷம் குடித்த தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

`உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; பாலியல் டார்ச்சர் !;’- விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்ற தூய்மைப் பணியாளர்

காவல்துறையினரிடம் ராதிகா அளித்த வாக்குமூலத்தில், “நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். நான் இருகூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாற்றி வருகிறேன். பேரூராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் ராஜதுரை என்னிடம் தகாத முறையில் நடந்து வந்தார். இதனை நான் தட்டிக்கேட்டால், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். ஒரு கட்டத்தில் ராஜதுரையின் தொந்தரவு அதிகமானது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ராஜதுரை ஈடுபட்டதோடு, மீண்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதனால் விஷம் குடித்த உயிரைவிடலாம் என்று நினைத்து விஷத்தை குடித்துவிட்டேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீஸார், ராஜதுரையை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.