பாலியல் தொல்லை- பள்ளிகளில் குழு அமைக்க உத்தரவு

 

பாலியல் தொல்லை- பள்ளிகளில் குழு அமைக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்துவருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பள்ளிகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. மாணவர்களுக்கு பாதுகாவலனாக விளங்க வேண்டிய ஆசிரியர்களே அவர்களை சீரழிக்கும் செயலில் ஈடுபடுவது பெற்றோருக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கே பெரும் இன்னலை ஏற்படுத்துகிறது. இதனால் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே பள்ளிக்குவரும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

பாலியல் தொல்லை- பள்ளிகளில் குழு அமைக்க உத்தரவு

இந்நிலையில் 12 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேவாலய மதபோதகர் ஜெயசீலனுக்கு விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயசீலனை மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை- பள்ளிகளில் குழு அமைக்க உத்தரவு

இதனிடையே பாலியல் புகார் குறித்து மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் எனவும்,
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்து குறையாத பெண் காவல் அதிகாரி கொண்ட குழுவை அமைக்குமாறு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது