பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக் குழு அமைப்பு!

 

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக் குழு அமைப்பு!

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்திருக்கிறார். பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜேஷ் தாஸ் மீதான புகாரை வாபஸ் செய்ய ஐ.ஜி முருகன் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மற்றொரு பெண் அதிகாரி ஒருவர் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக் குழு அமைப்பு!

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை உயரதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தினார்கள். அதே போல இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துணிந்து புகாரளித்த பெண் அதிகாரிக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக் குழு அமைப்பு!

இந்த நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி. அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.