வடமாநில தொழிலாளியை விரட்டி விரட்டி பாலியல் வன்கொடுமை ! சென்ற இடமெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான துயரம் !!

 

வடமாநில தொழிலாளியை விரட்டி விரட்டி பாலியல் வன்கொடுமை ! சென்ற இடமெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான துயரம் !!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், கர்நாடக மாநிலம் கும்பல்கோடு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவர் தொழிலாளர் தங்குமிடத்தில் இரண்டு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தபோதும் மேலும் ஒரு ஒப்பந்தக்காரரால் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். வடமாநில தொழிலாளியை விரட்டி விரட்டி பாலியல் வன்கொடுமை ! சென்ற இடமெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான துயரம் !!

பாலியல் வன்கொடுமை ஆளானவருக்கு ஏழு வயதில் குழந்தை உள்ளது. அவளும் அவளுடைய சிநேகிதியும், சிநேகிதியின் ஐந்து வயது குழந்தையும் ஜார்க்கண்டில் தங்கியிருந்தார்கள். சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு வேலை கொடுக்கும் சாக்குப்போக்கில் அவர்களை புதுதில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார் தமாரு என்பவர். பின்னர் அவர்கள் கும்பல்கோடு பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அவர்கள் விற்கப்பட்டதாக தெரிகிறது. அங்கே இரண்டு ஆண்கள் அவர்களைத் துன்புறுத்தி வந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அங்கிருந்து தப்பி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் “எங்களுக்கு வேலை தந்தவர்கள் தங்களை சுரேஷ் கோர் மற்றும் நூர் இஸ்லாம் அன்சாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர், தொழிற்சாலையில் பணிகளை எங்களுக்கு சொல்லி கொடுக்கும்போது துன்புறுத்தினர். மேலும் ரூ.9,000 மாத சம்பளம் தருவதாக கூறிவிட்டு தினக்கூலியாக ரூ.200 மட்டுமே தந்தனர். இதனால் நானும் எனது நண்பரும் கொட்டகையிலிருந்து தப்பிக்க முடிவு செய்தோம். அவர்கள் என்னை ஒரு அறையில் பூட்டி நூர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்த நாள், நூர் மற்றும் சுரேஷ் இருவரும் திரும்பி வந்து என்னை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை வெளியில சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள். அவர்களுக்குப் பயந்து, நாங்கள் சுமார் இரண்டு மாதங்கள் துன்பங்கள் அனுபவித்தோம். பின்னர் ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து அஸ்கர் அலி முஸ்தாப் என்பவரிடம் தஞ்சம் அடைந்தோம். அவர் எங்களை ஒரு கட்டுமான தளத்திற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்தார். பின்னர், அவர் என்னுடன் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார். இதனால் அவர் மீது கெங்கேரி போலீசில் புகார் அளித்தேன். இதையடுத்து தொழிலாளர் கொட்டகையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரரான அஸ்கரை போலீசார் கைது செய்தனர்.