’என்னிடம் அத்துமீறினார்’ அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார்

 

’என்னிடம் அத்துமீறினார்’ அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார்

அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார் தெரித்துள்ளார் விளம்பர மாடல் ஒருவர்.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

’என்னிடம் அத்துமீறினார்’ அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார்

துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

இதனால், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடந்துவருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, பரப்புரை செய்துவருகிறார்கள். இந்த நேரத்தில் என்ன கிடைத்தாலும் அதை தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்த முடியுமா என்றே இரு தரப்பினரும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல மாடலாக இருந்தவர் ஏமி டோரிஸ். அவர்தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

’என்னிடம் அத்துமீறினார்’ அமெரிக்க அதிபர் மீது பாலியல் புகார்
amy dorris

1997 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில், அப்போது தொழிலதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தன்னிடம் அத்துமீறியதாகவும், தன் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தன் மீது அத்துமீறும்போது தன்னால் விலக முடியாதபடி அணைத்துப் பிடித்திருந்ததாகவும் கார்டியன் பத்திரிகையில் பேட்டியில் கூறியிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஏமி கூறியிருப்பது அமெரிக்காவில் கடும் பேசுபொருளாகி விட்டது. எதிர்கட்சிகள் பெரும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்கள்.