• November
    19
    Tuesday

Main Area

Main



காதலனுக்கு தன்னிடம் படிக்கும் மாணவிகளை விருந்தளித்த கொடூர டியூசன் மிஸ்!

Rape
Rape

தன் காதலன் விரும்பியதால் தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளை விருந்தாக்கிய ஆசியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை தி. நகரை சேர்ந்த சஞ்சனா, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே டியூசன் நடத்திவருகிறார். அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சஞ்சனா, பாலாஜி என்பவரை காதலித்துவந்தார். ஆனால் பாலாஜிக்கு வேறு ஒரு பெண்ணின் மீது மோகம் இருந்தததால் சஞ்சனாவை களட்டிவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சனா, நான் என்ன செய்தால் நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி, உன்னிடம் படிக்கும் டியூசன் மாணவிகளை எனக்கு பரிசளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Rape

இதற்கு ஒகே சொல்லிய சஞ்சனா தன்னிடம் படிக்கும் மாணவிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று பாலாஜிக்கு விருந்தாக்கியுள்ளார். இதுபோல் பல மாணவிகளை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த மாணவிகளின் போட்டோ, வீடியோவை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இதனால் பாதிப்படைந்த ஒரு மாணவி, காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் சஞ்சனாவும், பாலாஜியும் சேர்ந்து குற்றத்தை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் வன்கொடுமை, மிரட்டி வழிப்பறி செய்தல், மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்தல், துன்புறுத்துதல், மிரட்டி அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.