திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது- ஒடிசா உயர்நீதிமன்றம்

 

திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது- ஒடிசா உயர்நீதிமன்றம்

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உடலுறவுகொள்வது, இந்திய தண்டனை சட்டம் 375வது விதியின் கீழ் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றச் செயலாக பார்க்கப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த இளைஞர் திருமணம் செய்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. இதன்விளைவாக அந்த பெண் கர்ப்பமடைந்தார். ஆனால் தற்போது அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பதாக சொல்லப்படுகிறது.

திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது- ஒடிசா உயர்நீதிமன்றம்

இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பனிகிரகி, பலாத்காரம் என்பதற்கான விளக்கம் சட்டப் பிரிவு 375இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் மிரட்டி நடைபெறுவதுதான் பலாத்காரம் என குறிப்பிட்டார்.

பெண்ணின் சம்மதத்துடன் நடந்தால் அது வன்கொடுமை இல்லை என்றும் விளக்கமளித்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உடலுறவுகொள்வது, வன்கொடுமை அல்ல எனக்கூறிய நீதிபதி, வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் ஏழைப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, பிறகு அவர் கர்ப்பம் அடைந்ததும், திருமணம் செய்ய மறுக்கும் ஆண்கள் அதிகரித்துவருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.