darbar
  • January
    25
    Saturday

Main Area

Main



பாலியல் குற்றவாளிகள் எல்லோருக்கும் இனி என்கவுண்டர்தானா? ஜூவாலா குட்டா கேள்வி

ஜூவாலா குட்டா
ஜூவாலா குட்டா

ஐதராபாத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது போல், எல்லோருக்கும் அது பெரிய இடத்துப் பிள்ளைகளாக இருந்தாலும் என்கவுண்டர் செய்யப்படுமா என்று பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் சென்று கொலை செய்த கொடியவர்கள் நான்கு பேர் இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இருந்து இதற்கு ஆதரவு கிடைத்து வருகிறது. பலரும் இந்த செயலை பாராட்டி தங்கள் சமூகஊடக பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

gutta jwala

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த என்கவுண்டரை வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு மற்றொரு வீராங்கனையான ஜூவாலா குட்டா பதில் ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதில் அவர், "இது எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்துமா? இன்னொரு மிக முக்கியமான கேள்வி, எல்லா பாலியல் பலாத்கார குற்றவாளிகளும் இதேபோல் நடத்தப்படுவார்களா? அவர்களின் சமூக நிலையை பொருட்படுத்தாமல் செய்யப்படுமா?" என்று கேட்டுள்ளார். அதாவது, அரசியல்வாதி, பணக்கார வீட்டுப் பையனாக இருந்தாலும் என்கவுண்டர் செய்யப்படுமா என்ற அர்த்தத்தில் அவர் கேட்டுள்ளார்.

ஐதராபாத் சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்குத் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கு கருத்தே இல்லை. ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பாகவே, அதிகாலை நேரத்தில் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதற்கு மேனகா காந்தி உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக ஊடக போராளிகள் கோரிக்கையை ஏற்ற என்கவுண்டர் செய்வதாக இருந்தால், குற்றம் செய்யாதவர்களைக்கூட மீது இதுபோன்று சம்பவங்களில் தொடர்புப்படுத்தி எளிதாக என்கவுண்டர் செய்துவிட முடியும் என்று சிலர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.