“நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னை விசாரிக்கணும்” -போலி நபரிடம் சிக்கிய பல பெண்கள் .

 

“நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னை விசாரிக்கணும்” -போலி நபரிடம் சிக்கிய பல பெண்கள் .


போலியாக போலீஸ் அதிகாரி வேடமிட்ட ஒரு நபர் பல பெண்களை பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் .


உத்திரபிரதேச மாநிலம் பஹர்கஞ்ச் பகுதியில் ஒரு நபர் போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு பல பெண்களை விசாரிப்பது போல ஹோட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக போலீசுக்கு புகார் வந்தது .
இந்த புகார் பற்றி டெல்லி போலீசார் சிசிடிவி கேமரா மற்றும் தொழில் நுட்ப பிரிவு மூலம் விசாரித்தனர் . அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீரட் மாவட்டத்தில் பகதூர்கரில் வசிக்கும் 28 வயதான சந்தீப் குமார் என்பது கண்டறியப்பட்டது .அவரை போலீசார் பொறி வைத்து பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மையாகள் வெளி வந்தது .
அந்த சந்தீப்குமார் இரண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு மனைவி மூலம் ஒரு மகனிருப்பதை கண்டுபிடித்தார்கள் .மேலும் அவர் டெல்லியில் உள்ள பல கேளிக்கை விடுதிகளுக்கு சென்று தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று பொய் சொல்லி அங்கு ரெய்டு நடத்துவதாக கூறி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது .அதன் பிறகு போலீசார் அந்த ஹோட்டல்களில் சென்று விசாரித்த போது அவர் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்திய தகவல் கிடைத்துள்ளது .
இதே போல செப்டம்பர் 6ம் தேதியன்று ஒரு பெண்ணிடம் தன்னை போலீஸ் அதிகாரி என்று பொய் சொல்லி அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளதையும் போலீசார் ர் கண்டறிந்துள்ளார்கள் .அதன் பின்னர் சந்தீப்குமார் மீது போலீசார் மோசடி மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னை விசாரிக்கணும்” -போலி நபரிடம் சிக்கிய பல பெண்கள் .