கழிவுநீர் செல்வதில் தகராறு… கூலி தொழிலாளி அடித்துக்கொலை…

 

கழிவுநீர் செல்வதில் தகராறு… கூலி தொழிலாளி  அடித்துக்கொலை…

மதுரை

மதுரையில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோச்சடை பகுதியை சேர்ந்தவர் முத்தையா. கூலி தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரகு என்பவருக்கும், வீட்டின் கழிவுநீர் செல்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கழிவுநீர் செல்வதில் தகராறு… கூலி தொழிலாளி  அடித்துக்கொலை…

இந்த நிலையில், நேற்று கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக இவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகு, தனது கூட்டாளிகளை அழைத்துச் சென்று முத்தையாவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முத்தையாவை, உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முத்தையா பரிதாபமாக உயிரிழந்தார். எஸ்.எஸ். காலனி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்து, தப்போடிய ரகு மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.