நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு: பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்

நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு: பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்

நாகையில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க தமிழக அரசு வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில், தட்டுப்பாட்டை பயன்படுத்தி யூரியா உரங்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு: பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 45,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் ஒரு லட்சம் எக்டேர் பரப்பளவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். பயிர்கள் பச்சையாக இருப்பதற்கு நைட்ரஜன் தேவைக்கு முக்கியமாக கருதப்படுவது யூரியா உரமாகும் . தற்போது ஒரே நேரத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி சுமார் ஒன்றரை லட்சம் எக்டர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருவதால் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது.

நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு: பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்

தனியார் மற்றும் வேளாண் கூட்டுறவு விற்பனை அகத்திலும் 280 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் யூரியா முட்டையின் விலை தற்போது தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் கடை உரிமையாளர்கள் யூரியாவை பக்கி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேசமயம் உர தேவையை கணக்கிட்டு வேளாண்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பினால் மட்டுமே தேவையான உரங்களை மத்திய அரசு இறக்குமதி செய்யும். ஆனால் மாநில வேளாண் அதிகாரிகள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணையில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளதால் இடுபொருட்கள் தேவை குறித்து கணக்கெடுப்பு செய்து மத்திய அரசிடம்

நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு: பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்

தேவையான உரங்களை காலத்தோடு கேட்டுப் பெற வேண்டும் அதேசமயம் உரம் விற்பனை செய்யும் கடைகளில் யூரியா கையிருப்பு குறித்து அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் அப்போதுதான் உரத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிசான் காட்டு முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் அதேவேளையில் விவசாயிகள் இடு பொருட்கள் குறித்தும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.