இங்க வந்து கட்சியை தொடங்குங்க.. அசாதுதீன் ஓவைசியை அழைக்கும் கேரள இளைஞர்கள்.. உஷாராகும் முஸ்லிம் லீக்

 

இங்க வந்து கட்சியை தொடங்குங்க.. அசாதுதீன் ஓவைசியை அழைக்கும் கேரள இளைஞர்கள்.. உஷாராகும் முஸ்லிம் லீக்

கேரளாவில் கட்சியை தொடங்குங்க என்று அம்மாநில இளைஞர்கள் அசாதுதீன் ஓவைசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் நீண்ட காலமாக முஸ்லிம்களின் கட்சியாக அறியப்படும் முஸ்லிம் லீக் எச்சரிக்கை அடைந்துள்ளது.

கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் முஸ்லிம் சமுதாயத்தினர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் பலத்த ஆதரவை முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து பெற்று வருகிறது. அமைதியான மதவாத நிலைப்பாடே முஸ்லீம் லீக்கின் வெற்றிக்கு காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் முத்தலாக் போன்ற விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது முஸ்லிம் உணர்வை பிரதிபலிப்பதில் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் அக்கறை காட்டவில்லை என்று அந்த சமூகத்தில் ஒரு வலுவான எண்ணம் நிலவுவதாக தகவல்.

இங்க வந்து கட்சியை தொடங்குங்க.. அசாதுதீன் ஓவைசியை அழைக்கும் கேரள இளைஞர்கள்.. உஷாராகும் முஸ்லிம் லீக்
அசாதுதீன் ஓவைசி

இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியை கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள் அமைப்பு தங்களது மாநிலத்தில் கட்சியை தொடங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கேரளாவில் முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லிம் லீக் கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அண்மையில்தான் அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 5 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்க வந்து கட்சியை தொடங்குங்க.. அசாதுதீன் ஓவைசியை அழைக்கும் கேரள இளைஞர்கள்.. உஷாராகும் முஸ்லிம் லீக்
முஸ்லிம் லீக்

அசாதுதீன் ஓவைசியின் வருகை குறித்து முஸ்லிம் லீக் தலைவர்கள் கூறுகையில், ஓவைசியின் அரசியல் ஸ்டைல் கேரளாவில் எடுபடாது என்று தெரிவித்தனர். அதேசமயம், சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அம்மாநிலத்தில் மற்றொரு சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள், ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணிக்கு பக்கம் சென்றதாக தோன்ற செய்கிறது. இந்த நேரத்தில் கேரளாவில் அசாதுதீன் ஓவைசி கட்சி நுழைவதால் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.