10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

 

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

ஒரு சமுதாய நலக்கூடம் இருந்தும் அதை அப்பகுதியினர் பயன்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கான அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தும் அதுவும் யாருக்கும் பிரயோஜனம் இன்றி பயனற்று முடக்கி வைக்கப்பட்டிருப்பது பகுதியினரை ஆத்திரப்படுத்தி இருக்கிறது.

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி அறிவித்திருந்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சொன்னபடியே அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.

கலைஞர் டிவி என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு தமிழகம் முழுவதும் அந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கி வந்தது திமுக அரசு. ஒவ்வொரு பகுதியாக கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் சில பகுதிகளில் கலைஞர் கலைஞர் தொலைக்காட்சி கொடுக்கவேண்டியது இருந்தது. அந்தப் பெட்டிகள் தயாராகி வரவர ஒவ்வொரு பகுதியாக கொடுத்துக் கொண்டே வந்தார்கள்.

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

அந்த சூழ்நிலையில் ஐந்தாண்டு காலம் நிறைவடைந்து விட்டது. அடுத்து நடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்டது. அதனால் அடுத்து வந்த அதிமுக அரசு எஞ்சியிருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கடலூரில் குண்டு சாலையில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் அடுக்கி வைத்தது. 2016 இல் நடந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றதால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் கட்டிலில் இருந்ததால், குண்டு சாலையில் உள்ள சமுதாய கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டிருந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன.

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

எந்த பிரயோஜனமும் இல்லாமல் பல ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு கட்டிடத்திற்குள் பூட்டி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அப்பகுதியினர் ஆதங்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த கட்டிடத்தை திறந்து அதிலுள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பள்ளி -கல்லூரிகளுக்கு இலவசமாக கொடுத்தால் மாணவர்கள் நல்ல நிகழ்ச்சிகளை பார்த்து பயன்பெறுவார்கள் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்து போராட்டங்களையும் நடத்தி பார்த்தனர். ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவே இல்லை.

10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பல ஆயிரம் கலைஞர் தொலைக்காட்சி பெட்டிகள்

பூட்டிய அந்த சமுதாயக்கூடம் பூட்டிய அப்படியேதான் இருக்கிறது இன்னமும். இதனால் இந்த கட்டடத்தின் மீது முட்புதர்கள் கருவேல மரங்கள் வளர்ந்து ஒரே பாழடைந்த இடமாகவே காட்சியளிக்கின்றது. இந்த சமுதாயக் கூடத்தில் கட்டிடங்களும் கதவுகளும் இடிந்து பாதிப்படைந்துள்ளன. அதை அப்பகுதியினர் முட்களை கொண்டு வைத்து அடைத்து வைத்திருக்கின்றனர்.

இந்த சமுதாயக் கூடத்தில் தான் குண்டு சாலை மக்கள் தங்களது திருமணம் மற்ற நிகழ்ச்சிகளை இலவசமாகவும் குறைந்த பணத்திலும் நடத்தி வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளதால் சமுதாயக்கூடம் பூட்டப்பட்டு இருப்பதால் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் அதில் நிகழ்த்த முடியாமல் அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் இந்த அரசாவது இந்த வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிக்கு ஒரு முடிவை எடுக்குமா? தேவையானவர்களுக்கு இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கிவிட்டு சமுதாய கூடத்தை சீர்படுத்தி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்குமா? என்று திமுக அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கடலூர் குண்டுசாலை மக்கள்.