Home சினிமா ஒரு ரவுடி பேபி... பேபி ரவுடி ஆன கதை! பிக்பாஸ் 17-ம் நாள் #BiggBoss4

ஒரு ரவுடி பேபி… பேபி ரவுடி ஆன கதை! பிக்பாஸ் 17-ம் நாள் #BiggBoss4

’மான் கராத்தே’ படத்தின் துள்ளல் பாடலை ஒலிக்க விட்டு எழுப்பினார் பிக்பாஸ். அப்போது யாருக்கும் தெரியாது. வீட்டில் பலரின் மான்கராத்தே ஸ்டெண்ட்டுகள் முடிவுக்கு வரும் என்று.

காலையிலேயே ஓலை அனுப்பி, நேற்று ராஜ வம்சம் இன்று அரக்கர்களாகவும், அரக்கர்கள் ராஜ வம்சமாகவும் வேஷத்தை உல்ட்டா பண்ணிக்கொள்ளவும் என்று சொல்லியிருந்தார் பிக்கி. ‘ஹேய்…. என்று உற்சாகமாகக் கைத்தட்டினார் ரம்யா. சிலையாய் நிற்க ரொம்ப பயந்திருப்பார் போல?

சுரேஷ்தான் ராஜாவாம். அலப்பறை தாங்கல. அடிக்கடி கேமரா முன் வந்து டயலாக் பேசி….வசூல்ராஜாவின் கமல் சொல்வாரே… என்ன… அவார்டா கொடுக்கிறாங்க… இப்படி நடிக்கிற? ரம்யா ட்ரஸ் அனிதாவுக்கு, ஷனம் ட்ரெஸ் ஷிவானிக்கு.

ஒருநாள் கூத்துக்காக மீசை எடுத்த ரியோ பிஞ்சு மூஞ்சில் கறுப்பு கலர் பூசி டெடரர் காட்ட முயல, அது காமெடியாகவே இருந்தது. வேல்ஸ், நிஷா, பாலா, ரம்யாவுக்குள் அரக்காஸ் வந்து சரியாகவே குடியேறிந்தார்கள்.

அரக்கர்கள் முன் சிலையாய் நிற்க அர்ச்சனா வந்தார். அரக்கர்கள் என்ன செய்தும் அசைவதாக இல்லை அர்ச்சனா. இடையில் சுரேஷ், அனிதாவின் வீர வசனங்கள் வேற… அர்ச்சனாகூட ஜெயிச்சிட்டு போகட்டும். இவங்க கொஞ்சம் ம்யூட் பண்ணுங்க பாஸ் என அரக்கர்ஸ் நினைச்சிருப்பாங்க.

ஒருவழியாக அர்ச்சனா வென்றதும், அரக்கர்களே வாழ்த்தி அனுப்பினார்கள். சுரேஷ் வெற்றி திலமிட்டு அர்ச்சனாவை வரவேற்க… ‘நீங்க கேரக்டராகவே மாறீட்டிங்களா ஜி’

‘நாங்கெல்லாம் அப்பவே கிரிமினலா யோசிப்போம்’ என அரக்கர் டீம், வெளியே வருபவரை அசைய வைக்க ஸ்ப்ரே அடிக்கலாமா… கஷாயம் காச்சலாமா? என்ற ரேஞ்சுக்கு திட்டமிட்டார்கள்.

ஆரி இன்னும் தன்னை அந்த கேரக்டரில் பொருத்திகொள்வதற்கு முன்பே வெளியே வந்து அசையாது நின்றார். பாலாவும் சோம்ஸீம் திடிரென்று காதில் கத்த… அப்பவும் ஆடாமல் நின்றார் மனுஷன்.

’ஷனம் பேய்… ரம்யா பேய்..’ என கல்யாண வீட்டில் சுற்றித் திரியும் குழந்தையைப் போல உற்சாகத்தில் திளைத்தார் சுரேஷ். அப்பவே அவர் நாக்கில் சனி குந்திட்டு இருக்கிறது தெரியாமல்.

ஆரெஞ்சு பழத்தோலை வெச்சு, ஆரியின் தவத்தைக் கலைத்தார்கள். ‘இப்படி விளையாடறதுக்கு வேற ஏதாச்சும் செய்யலாம்’ எனக் கோபத்தில் கத்தினார். என்னடா இது அண்ணனைப் பார்த்து பொசுக்குனு சொல்லிபுட்ட? என்பதுபோல மற்றவர்கள் ரியாக்‌ஷன் காட்ட, ஆரி அரக்கராகி விட்டார் என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்தார் பிக்கி. ஆனாலும், அந்தக் கேரக்டரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தார் ஆரி. அரக்கர் கூட்டத்தில் சேர்ந்தும், ‘நானென்ல்லா ஆரஞ்சு தோலை வெச்சி அடிக்க மாட்டேன்’ என முணகிகொண்டிருந்தார்.

ஜித்தன் ரமேஷ் சிலையாய் நிற்க, அரக்கர்களின் ஸ்ப்ரே முயற்சிகளுக்கும் பெப்பே சொல்லிக்கொண்டிருந்தார். அவரை அசைய வைக்க வேண்டுமென்றால் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பது போன்ற எந்த வழியையும் யோசிக்க வில்லை இரண்டு அரக்கர் கூட்டமும். அதனால், உணர்ச்சியற்று சிலையாய் நின்னது ரமேஷ் மட்டுமல்ல…. ஆடியன்ஸ்தான். ஹேய்… படத்துலேயே முகத்துல எக்ஸ்பிரஷன் காட்ட யோசிக்கும் ரமேஷ், இப்ப மட்டும் அசைஞ்சிடுவாரா என்ன… ஆமா, வெற்றி… வெற்றி… ரமேஷ் வெற்ற்றி..

இதற்கிடையில் அரக்காஸ் வைத்திருந்த ஸ்ப்ரே, மூக்குப்பொடி எல்லாத்தையும் ராஜா ஃபேமிலி தூக்கிட்டு போய்ட்டாங்க. அதை எடுக்கிறதுக்காக பாத்ரூம் பக்கத்துல இருக்கிற ஷெல்ப்க்கு பாலா போக, ஷிவானி தடுத்துக்கொண்டிருந்தார். ஷிவானியிடம் கெத்தாகப் பேசிட்டு இருந்த பாலா, கேபி வந்ததும் குழைஞ்சிட்டார். என்ன பாஸ் நடக்குது?

இன்னொரு பக்கம் சோம்ஸ் மொளகா பொடியைத் தூக்கி ஓடறேன்னு ஓடி, அனிதா துரத்த டப்பாவைத் தூக்கி செட்டில் அடிக்க அர்ச்சனா சூடேறினார். நம்ம ப்ராப்பர்ட்டி என்னாச்சு என பிக்கி கேமராவில் செக் பண்ணிட்டு இருந்தார். சோம்ஸ் தனது முயற்சி தோல்வில் இருக்க, அனிதா ஏதோ கேட்க…. ‘உன் பேச்செல்லாம் கேட்கணும்னு அவசியமில்ல’என கோபத்தைக் காட்டினார். அனிதா – சோம்ஸ் நட்பில் இப்படியான உரிமை கோபங்கள் அடிக்கடி நடக்குது… பின்னாடி உதவும் என நினைத்திருப்பார் பிக்கி.

சிலையாய் நிற்க ஆஜித் வந்தார். அப்பாடா… வாப்பா வா… உன்னையை கேமராவில் காட்ட ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு… ஆமா.. ரெண்டு நாளா எங்கே கண்ணா போயிருந்த? அதே ஸ்ப்ரே, அதே ஆரெஞ்சு, அதே டெய்லர் என்பதால் உஷாராகி வந்த ஆஜித் அசைய வில்லை.

ஆனால், இன்னொரு இடத்தில் பிக்பாஸ்க்கு கண்டெண்ட் கிடைச்சுது. தான் ராஜா என்பதை மறந்து பேய் ஓட்டும் மந்திரவாதியாக விளக்குமார், கட்டையெல்லாம் வெச்சு எல்லோரையும் அடிச்சிட்டு இருந்தார் சுரேஷ். ஷனம் நெற்றியில அடித்து விட பிடித்துக்கொண்டார் ஷனம்.

‘வாடா… வாடா… வெளியே வாடா” என கிட்னி எடுக்கக் கூப்பிடும் சிறுவன் போல கூப்பிட்டுஇருந்தார் ஷனம். சின்ன சண்டை தான் என நினைத்த சுரேஷ், போலியாய் ஸாரி சொல்லிட்டு வேலையைப் பார்த்தார்.

என்னையும் ரம்யாவையும்கூடத்தான் வெளக்கு மாறால் அடிச்சாரு… நாங்க அது கண்டெண்ட் நினைச்சு விட்டுட்டோம் என்றார் நிஷா. ஆஹா… ஆனா, ஷனம் ஓயவில்லை. இதன் சீரியன்ஸைப் புரிந்த அர்ச்சனா நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்தார்.  இதில் ஆச்சர்யம் என்னன்னா… ஷனமின் எதிரியான பாலா, ஷனமிற்காக சுரேஷிடம் சண்டை போட்டுட்டு இருந்தார்.

என்னையும் ரம்யாவையும்கூடத்தான் வெளக்கு மாறால் அடிச்சாரு… நாங்க அது கண்டெண்ட் நினைச்சு விட்டுட்டோம் என்று மறுபடியும் மறுபடியும் சொன்னார் நிஷா. ‘ஏங்க, அவர் ஒரு தடவைதான் அடிச்சார். அதை சொல்லி சொல்லியே திரும்ப திரும்ப அடிக்கிறயே’னு ஒரு லுக் விட்டார் ரம்யா.

அடுத்து கேபிரியல்லா சிலையாகினார். அதே ஸ்ப்ரே, அதே ஸ்மெல், அதே டெய்லர்… போதும்பா… கொல்கத்தா – பெங்களூர் மேட்ச்கூட செம போர். இல்லாட்டி வண்டிய அங்கிட்டு ஓட்டிடுவோம் என ஆடியன்ஸ் பொறுமை இழக்க, ‘பயமா இருக்கா கேபி’ என அரக்கர்கள் கேட்க, ’ஆமா’ எனச் சொன்னது கேபி அல்ல ஆடியன்ஸ். ஒரு வழியாக வென்றார் கேபி.

இந்த விளையாட்டில் அசைய வைக்க பயமுறுத்துவது என்பதை மட்டும் நம்பாமல், தங்களின் தனித்திறமைகளைப் பயன்படுத்தி நன்றாக ஆடியிருக்கலாமோ என்றுதான் தோன்றியது.

சுரேஷ்க்கு மனதில் உறுத்த ஆரம்பிசிடுச்சு. கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு கூப்பிடுங்க. உங்கக்கிட்ட பேசணும் எனச் சொல்லிகிட்டே இருந்தார். ஒருவழியாக பிக்கி கூப்பிட்டதும், வந்து பேச ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் அழுதே விட்டார். ‘நானா கொளுத்தி போடறேன்… அவங்களே அவங்க முகத்தைக் காட்டறாங்க. லோகத்தில யாருமே நல்லவா கிடையாது’ என சுரேஷ் அழுகையைப் பார்த்ததும், என்ன ஜி உங்களை பெரிய ரவுடி பேபினு சொன்னாங்க… நீங்க பேபி ரவுடியாக இருக்கீங்க.

ஜோக் எல்லாம் கடந்து பார்க்கையில் சுரேஷ், நிஜயமாகவே தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். ‘திடீரென்று என்னை எவிக்‌ஷன் பண்ணிடுங்க’ என்றார். பிக்கியே ஜெர்க் ஆகியிருப்பார் போல. ’தெரியாமத்தானே பண்ணினீங்க சுரேஷ்’ என்றார் பிக்கி. ‘ஆமா… சொல்லுயா… உன்னைய மன்னிச்சிடுறேன்’என்பதாக இருந்தது அவர் தொனி. அப்படியே நடந்தது. ‘உங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்கோங்க’ என்று விடைக்கொடுத்தார் பிக்கி. ஆனாலும் கொஞ்சம் இருந்துட்டு போறேன்னு சுரேஷ் உட்கார்ந்திருந்தார். அப்போது கவலையோடு இருந்த ஒரு பொம்மையைத் திரையில் காட்டி, இதுதான்யா என் மனநிலைன்னு சொல்லாமல் சொன்னார் பிக்கி.

ஆர்வமே ஆபத்தாகி விடும் என்பதாகி விட்டது சுரேஷ்க்கு. இப்பவும் ஷனம் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பாதி வரை கொண்டுபோய் நனைய விட்டுவிட்டார்.  பிக்பாஸின் பின் கதை சுருக்கத்தோடு லைட்ஸ் ஆஃப் செய்தார்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு

மாவட்ட செய்திகள்

Most Popular

உளவுத்துறைகளின் சர்வே சொல்வது என்ன? ஸ்டாலின்தான் அடுத்த முதல்வரா?

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று மத்திய,மாநில உளவுத்துறைகளின் சர்வே மற்றும் தனியார் சர்வேக்கக்களிலும் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது திமுக.

“கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்குக! ” – பாமக ராமதாஸ்

கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய...

ஜன.21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜன.21ம் தேதி நடைபெறவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

தனியார் பேருந்து – ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து… மூதாட்டி உள்பட 2 பேர் பலி…

கோவை கோவையில் அதிகாலையில் தனியார் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!