கூடாரம் அமைத்து கும்மாளம், உல்லாசம் – கொடைக்கானலின் தீராத தலைவலி

 

கூடாரம் அமைத்து கும்மாளம், உல்லாசம் – கொடைக்கானலின் தீராத தலைவலி

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கே விடுதியில் தங்காமல் மலை உச்சியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து, அப்பகுதியினருக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இருவரும் மட்டுமே தங்கக் கூடிய கூடாரம் அமைத்து அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கவும் ஒரு தரப்பு இருக்கிறது.

கூடாரம் அமைத்து கும்மாளம், உல்லாசம் – கொடைக்கானலின் தீராத தலைவலி

இதற்கு கொடைக்கானல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த கூடார உல்லாச விடுதிக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி சுற்றுலாப்பயணிகள் இப்படி கூடாரத்தில் தங்கி வருகின்றதோடு அல்லாமல் அவர்கள் அடித்த கும்மாளலத்தில் ஊர் மக்கள் திரண்டு வந்து புகார் அளித்து விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி மலைப் பகுதி முழுவதும் கூடாரங்கள் அமைத்து தங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. பெரும்பாலும் உல்லாசத்திற்கே இங்கே வந்து செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் 10 கூடாரம் அமைத்து தங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வட்டகானல் பகுதியில் 10th கூடாரம் அமைத்து தங்கி இதைத்தொடர்ந்து ஊடகங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன .

கூடாரம் அமைத்து கும்மாளம், உல்லாசம் – கொடைக்கானலின் தீராத தலைவலி

கூடாரம் அமைப்பதற்கு நிலம் கொடுத்த நிலத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி டென்ட் மெண்ட் அமைத்து தங்குவதால் அப்பகுதியில் வசிப்போருக்கு தொந்தரவு ஏற்படுவதாக புகார் எழுந்து வருவதால் அட்டுவம்பட்டி கொடைக்கானல் கோட்டாட்சியர் கூடாரங்கள் அமைத்து தங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.

அப்படியிருந்தும் அட்டுவம்பட்டி இரண்டு கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டதால் அப்பகுதியினருக்கு இடையூறாக இருந்து இருக்கிறது. இதை அடுத்து திரண்டு வந்த உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகளிடம் இடத்தை காலி செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருக்கிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.