வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

 

வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

கோவை

கோவை மாவட்டம் வாளையாரில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த நிகழ்வை அடுத்து, காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வாளையார் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டிருந்த பாலக்காடு போலீசார், அந்த வழியாக வந்த லாரியில் கடத்திச்சென்ற சுமார் ஒன்ரை கோடி ரூபாய் மதிப்பிலான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவற்றை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்திய சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளவரசன் மற்றும் உதவியாளர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதனை அடுத்து, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணிணை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வெடி பொருட்கள் பறிமுதல் எதிரொலி- வாளையாரில் லாரிகளில் தீவிர சோதனை!

குறிப்பாக, காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 300 சரக்கு லாரிகள் வரை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

வாகன சோதனை காரணமாக, கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச் சாவடியில் சரக்கு வாகனங்கள் நீண்ட காத்தருப்புக்கு பிறகே புறப்பட்டு செல்கின்றன.