“தூத்துக்குடியில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை” – எஸ்.பி.ஜெயக்குமார்

“தூத்துக்குடியில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை” – எஸ்.பி.ஜெயக்குமார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையாக போதை பொருட்களை தடை செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்ட எஸ்.பி ஜெயக்குமார், நடப்பு ஆண்டு 6 டன் அளவிலான கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

“தூத்துக்குடியில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை” – எஸ்.பி.ஜெயக்குமார்

இதுதொடர்பாக 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து உள்ளதா கூறிய அவர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையாக போதை பொருட்களை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.