மதரீதியான மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

மதரீதியான மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

மதரீதியான மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து சாதி, மத, இன- மொழி ரீதியிலான மோதலை தூண்டுவதாக கருப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதரீதியான மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை!

இந்நிலையில் இதுகுறித்து விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ‘தமிழகத்தில் மதரீதியான மோதலை உருவாக்கினால் அதை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.