Home அரசியல் `தொடர் பாலியல் புகார்; இளைஞரணியை கண்டுகொள்ளாத உதயநிதி !'- கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்

`தொடர் பாலியல் புகார்; இளைஞரணியை கண்டுகொள்ளாத உதயநிதி !’- கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், கள்ளக்காதலால் நடக்கும் கொலைகள், இளம்பெண்களை, குறிப்பாக 16 வயது சிறுமிகளை நம்ப வைத்து அவரின் கற்பை சூறையாடிவிட்டு ஏமாற்றுதல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் திமுகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகி ஒருவர் தனது சகோதருடன் சேர்ந்துக் கொண்டு ஒரு பெண்ணின் கற்பை களவாடினர். நம்ப வைத்து கழுத்தை அறுத்த அந்த கயவர்களின் செயலால் நொந்துபோய் உயிரை மாய்த்துக்கொண்டார் அந்த பெண். திமுக இளைஞரணியினர் செய்யும் இந்த மோசமான காரியத்தால் ஏக கடுப்பில் இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை நடத்திய விசாரணையில், பெரியப்பா மகன் தேவேந்திரன் என்பவர் சசிகலா பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்ததோடு, அதை வைத்து மிரட்டி பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இதை அறிந்த தேவேந்திரன், ‘நீ கட்டிக்கிட்டு போயிட்டா என் ஆசையை யார் தீர்ப்பாங்க?’ என்று கூறி திருமணம வேண்டாம் என்று சொல்ல சசிகலாவை மிரட்டியிருக்கிறார். இதனை மறுத்த சசிகலா, ‘உன் வீடியோவை நெட்ல போட்டுருவேன்’ என்று மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

தனது சகோதருடன் தேவேந்திரன் (வயது பக்கம் இருப்பவர்)

இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான இந்த தேவேந்திரன், தி.மு.க. இளைஞரணி நிர்வாகி என்பதுதான் அதிர்ச்சி. தேவேந்திரனின் செயலால் திமுகவுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், வேலூர் மாவட்டம் மாதனூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த தேவி என்ற இளம் பெண்ணை, வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளரான சுதாகர் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிய அந்த பெண்ணின் கற்பை சூறையாடி இருக்கிறார். பின்னர் அந்த பெண்ணை அவர் கைகழுவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய சுதாகர் தயாரானார். தகவல் அறிந்து அதிர்ந்துபோன தேவி, சுதாகரிடம் நியாயம் கேட்க சென்றுள்ளார்.

அப்போது சுதாகர், ” உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் தி.மு.க.வுல பெரும் புள்ளி. இவ்வளவு நாள் இந்த பெரிய தலைவர்ட்ட பழகுனதை உன் வாழ்நாள் பாக்கியமா நினைச்சு மறந்துட்டு ஓடிடு. புகார் அதுயிதுன்னு போனாலும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது” என திமிரை காட்டியிருக்கிறார் . வேறு வழியில்லாமல் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் தேவி. இந்த புகாரையடுத்து, வேப்பங்குப்பம் காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர்.

மேலும், பியூட்டி பார்லரினுள் திமுக நிர்வாகி ஒருவர் நுழைந்து ஒரு பெண்ணை அடித்து உதைத்த சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் பிறகும் திமுகவினர் இப்படி அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருப்பதால் ஏக கடுப்பில் இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின். இளைஞரணியினரின் இந்த கீழ்த்தரமான செயலால் அதன் மாநில செயலாளர் உதயநிதி மீது கடும் எரிச்லில் இருக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் மீது வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சாட்டையை எடுக்காவிட்டால் தேர்தலில் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். எல்லாம் மகன் செயல்!

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews