'நிலைமை ரொம்ப மோசமா இருக்கு...என்ன கொல்ல பாக்குறாங்கனு கதறுறா' பிக் பாஸ் ரேஷ்மாவின் பகீர் பேட்டி!

 ஜெயஸ்ரீ - ரேஷ்மா
ஜெயஸ்ரீ - ரேஷ்மா


சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் சின்னதிரை நடிகை மகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.  இதையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்  ஜாமீனில் வெளிவந்தார்.

ttn

இதையடுத்து நேற்றைய தினம் ஜெயஸ்ரீ  குடும்ப பிரச்னை மற்றும் மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்து கொள்வதற்கு முன், தனது தோழி ரேஷ்மாவுக்கு ஆடியோ ரெக்கார்ட் செய்து அனுப்பியுள்ளார். அதில், "  ஹாய் ரேஷ்.. எனக்கு தெரியல நான் இப்போ ரொம்ப மனஅழுத்ததில் இருக்கிறேன். எனக்கு வாழ தகுதியில்ல.. இந்த வாய்ஸ் மெசேஜ், இவ்வளோ நாள் நீ என்னை பார்த்துக்கிட்டதுக்கு உனக்கு நன்றி சொல்றதுக்கு தான். நான் உன்ன பாத்துக்குறேன், இங்க வா அப்படின்னு நிறைய சப்போர்ட் கொடுத்த. லவ் யூ கண்ணா..முடிஞ்சா அப்பப்போ நன்னுவ பாத்துக்கோ..குட் பை ரேஷ் "  என்று கூறினார்.  இதையடுத்து அவர் நண்பர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

ttn

இந்நிலையில் ஜெயஸ்ரீ ஆடியோ அனுப்பி தோழி  பிக் பாஸ் ரேஷ்மா தான் என்பது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து ரேஷ்மா அளித்துள்ள பேட்டியில், 'ஜெயஸ்ரீ அடிக்கடி என்னை கொலை செய்யப்பார்க்கிறார்கள். எனக்கு மனநிலை சரி இல்லை என்று  கூறிவந்தார். சமீபத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது  காரை இடித்த இரண்டு பேர் காரை இங்கேயே விட்டுவிட்டு போ என்று மிரட்டியதாக கூறியதாகவும் தெரிவித்தார். தற்போது   ஜெயஸ்ரீ உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று அந்த பேட்டியில்  ரேஷ்மா கூறியுள்ளார்.