’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் மாதம் 31 –ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 –ம் தேதி வரை உற்சாகமாக நடைபெற்று வருகிறது. டென்னிஸ் ரசிகர்களும் ஒவ்வொரு நாளும் அட்டகாசமான ஆட்டத்தைப் பார்த்து ரசித்து, வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

இன்று நடைப்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதன்மை வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (Victoria Azarenka) எதிர்த்துக் களம் கண்டார் செரினா வில்லியம்ஸ்.

’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

இருவருமே திறமையான வீராங்கனை என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் விறுவிறுப்பு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். அதன்படி, ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினார் செரீனா வில்லியம்ஸ்.

முதல் செட்டில் 6:1 எனும் கணக்கில் முன்னணியைப் பதிவு செய்தார் செரீனா வில்லியம்ஸ். ஆனால், அடுத்த இரண்டு செட்களும் செரீனாவுக்கு சாதகமாக இல்லை. முதல் செட்டில் கோட்டை விட்ட விக்டோரியா அஸ்ரென்கா, அடுத்தடுத்த செட்களில் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்தினார்.

’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

அதனால், இரண்டாம் செட்டில் 6 : 3 எனும் கணக்கில் சமன் படுத்தினார் அஸ்ரென்கா. மூன்றாம் செட்டில் யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். அஸரென்காவின அதிரடியால் மூன்றாம் செட்டை வென்றது அவரே.

’செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி’ அமெரிக்க ஓபன் டென்னிஸ் அப்டேட்

இதனால், அதிர்ச்சி தோல்வி அடைந்தார் செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான் செரீனா, டென்னிஸ் விளையாட்டில் பலருக்கும் ரோல்மாடலாக விளங்குபவர். இப்போது அரையிறுதியில் தோற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 1999, 2002, 2008, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகள் பட்டம் வென்றவரே செரீனா வில்லியம்ஸ்தான்.