தனி மாவட்டம் ஆகியும் தீராத தலைவலி: அவதிப்படும் திருப்பத்தூர் வாசிகள்

தனி மாவட்டம் ஆகியும்  தீராத தலைவலி: அவதிப்படும் திருப்பத்தூர் வாசிகள்

திருப்பத்தூர் – சேலம் செல்லும் பிரதான சாலை நரகமாக மாறியுள்ளது. இந்த சாலை திருப்பத்தூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, ஆலங்காயம், புதூர் நாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஒரே சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் இச்சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.

தனி மாவட்டம் ஆகியும்  தீராத தலைவலி: அவதிப்படும் திருப்பத்தூர் வாசிகள்

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆனபோதிலும் இந்த சாலை மட்டும் மாறவே இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலையில் சென்று வருவது நரகத்தை தாண்டி சென்று வருவது போல் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை நிர்வாகம் உடனடியாக திருப்பத்தூர் – சேலம் பிரதான சாலையை சீர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை புதிய சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சாலை அமைக்க தாமதமாவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போதைக்கு சாலையில் மழைநீர் தேங்காமல் செய்துவிட்டாலே வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தனி மாவட்டம் ஆகியும்  தீராத தலைவலி: அவதிப்படும் திருப்பத்தூர் வாசிகள்