ஈரோட்டில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க தனி குழு!

 

ஈரோட்டில்  முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்க தனி குழு!

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முக கவசம் உயிர்க்கவசம் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் முதலில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும் இரண்டு முறை அதே நபர் முக கவசம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் அபராதமும், மூன்றாம் முறை அதே நபர் முக கவசம் அணியாமல் சிக்கினால் 500 ரூபாய் அபராதமும் , மீண்டும் அதே நபர் சிக்கினார் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோட்டில்  முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்க தனி குழு!

இதையடுத்து மாநகராட்சி சார்பில் இதற்கென்று தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் மோசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் பத்தாயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதன் மூலம் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி அதிகாரிகள் மட்டும் செய்து வந்தனர். இருந்தாலும் பொது மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இன்னும் ஒரு சிலர் வெளியே வரும்போதும் முக கவசம் அணிந்து வருவதில்லை. குறிப்பாக பெண்கள் அருகில் இருக்கும் கடைக்கு சென்றால் கூட முக கவசம் அணிந்து செல்வதில்லை. இதனால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் உயர்த்தப்பட்டது .

இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் வருவாய் துறையினர் சுகாதாரப் பணியாளர்கள் போலீசார் என முக கவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி ரூ 200 அபராதம் விதித்தனர். இவ்வாறாக 55 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோட்டில்  முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்க தனி குழு!

இதுகுறித்து அதிகாரிகள், ஈரோடு மாவட்டத்தில் வைரஸ் அதிகமாக உள்ளது குறிப்பாக மாநகர் பகுதியில் வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும். மாநகர் பகுதியில் இதனை ஏற்று பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருகின்றனர். தற்போது மீண்டும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கென்று தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது எங்களுடன் இணைந்து வருவாய்த்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், போலீசாரும், அபராதம் விதித்து வருகின்றனர் என்றனர்.