கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு பக்கவாதம், நிமோனியா பிரச்னைகள் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு பக்கவாதம், நிமோனியா பிரச்னைகள் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது . நேற்று ஒரேநாளில் 5,860 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு பக்கவாதம், நிமோனியா பிரச்னைகள் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!

இந்நிலையில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தொற்றிலிருந்து குணமாகிச் சென்ற 20% நபர்கள் வேறு பிரச்சனை உள்ளதாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்த புகார் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு பக்கவாதம், நிமோனியா பிரச்னைகள் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லும் தகவல்!

சிலருக்கு இதய பிரச்சனை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே குணமாகிச் சென்றவர்களை கண்காணிக்க ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கண்காணிப்பு மையம் துவங்கப்படவுள்ளது. இந்த மையமானது தமிழகம் முழுவதும் விரைவில் ஆரம்பிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.