Home அரசியல் செப். 22 இரவு மருத்துவமனை சென்ற ஜெயலலிதா- பிரேக்கிங் செய்திகளை தொடங்கிய அதிமுக

செப். 22 இரவு மருத்துவமனை சென்ற ஜெயலலிதா- பிரேக்கிங் செய்திகளை தொடங்கிய அதிமுக

தமிழக அரசியலில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக பிரேக்கிங் செய்திகளை அளித்த கட்சி என்றால் அதிமுகதான். அதிமுகவை பொறுத்தவரை அந்த பரபரப்பு தொடங்கிய நாள் 2016 செப்டம்பர் 22.

மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதா , உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாள் . அப்போது தொடங்கிய பரபரப்பு, நான்கு ஆண்டுகளைக் கடந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழக அரசியலில் போக்குகளை அதிமுக தீர்மானித்து வருகிறது. அப்போது முதல் தமிழகத்தில் அதிக பிரேக்கிங் செய்திகளை அளித்த கட்சி என்றால் அதிமுகதான்.

2016 செப். 22ம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? டிவி சேனல் வெளியிட்ட  பரபரப்பு தகவல்கள் | Jayalalitha's patient care report timeline - Tamil  Oneindia

ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின்னர் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் பல குழப்பங்கள் தொடங்கின.

அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பதவி விலக வைத்து, தமிழக முதல்வராக சகிகலா திட்டமிட்டார். முதல்வராக பொறுபேற்கும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிய ஓ.பி.எஸ், தன்னைக் கட்டாயப்படுத்தியதால், பதவி விலகியதாக தெரிவித்து ஜெயலலிதா சமாதியில் மெளன விரதம் இருந்தார்.

OPS to get rising star award during USA trip - DTNext.in

அதையடுத்து பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுகிறார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றபோது அவருடன் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர்.

இதனால், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பிஎ.ஸ். ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.

அதன்பின்னர், புதிய ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். சகிகலா குற்றவாளி என தீர்ப்பு வந்ததால், சிறைக்கு செல்லும் முன் ஆட்சிப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்துச் சென்றார்.

சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் டி.டி.வி. தினகரன் இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது.

OPS-EPS slugfest: Confused party cadre wait and watch - DTNext.in

ஓ. பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி இடைக்கால பொதுச்செயலாளர் வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக, சகிகலா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிமீது நம்பிக்கை இல்லை என மனு அளித்தனர்.

கட்சி கொறடா விதிகளை மீறிய அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.

அவர்களுள் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கி நிலையில், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது.

இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் தோல்வி அடைந்தன.

பதவி பறிக்கப்பட்டதால் காலியான இடங்கள் மற்றும் 4 உறுப்பினர்கள் மறைவை அடுத்து 22 தொகுதிகளுக்கு தேர்தல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்றது.

இதற்கிடையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, அதிமுக சின்னத்துக்கு இரண்டு அணிகளும் உரிமை கோரியதால் சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.

அந்த இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னமும், சசிகலா அணி தொப்பி சின்னத்திலும் போட்டியிட்டன.

ஓ.பி.எஸ் அணி அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணி அதிமுக அம்மா என்ற பெயரையும் பயன்படுத்தின. ஆர்.கே.நகர் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.

கட்சியின் சின்னமும், கொடியும், அதிமுக கட்சியும் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் பயன்படுத்தின. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனிக் கட்சி தொடங்கினார்

இந்த நான்கு ஆண்டுகளில் அவ்வபோது ஜெயலலிதா இறப்புக்கு சகிகலாதான் காரணம் என பல அமைச்சர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.

சிறையில் இருந்த சகிகலா, சிறையில் சில காவல் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வெளியில் சென்று வந்தார் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் அந்த கட்சியில் தொடங்கியுள்ளது.

ஒபிஎஸ் தரப்பும்- இபிஎஸ் தரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். உள்ளுக்குள் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்கிற பிரேக்கிங் செய்திக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று...

கேரளா மாதிரி பழங்கள், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க…. பஞ்சாப் அரசை நெருக்கும் எஸ்.ஏ.டி…

கேரளாவை பின்பற்றி, நம் மாநிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க என்று பஞ்சாப் அரசு எஸ்.ஏ.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர்...

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்… தேஜஸ்வி யாதவ் பதில்

பிரதமர் மோடி தன்னை காட்டாட்சி இளவரசர் என்று கூறியது குறித்து பதிலளிக்கையில், நாட்டின் பிரதமர் என்பதால் அவரால் எதுவும் பேச முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி (சமாஜ்வாடி) வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து காலியாக...
Do NOT follow this link or you will be banned from the site!