“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

 

“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனுமான ப.ரவீந்திரநாத் குமார் இன்று முதல் தனது பெயரை ‘ப.ரவீந்திரநாத்’ என்று மாற்றி உள்ளார்.

“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

பெயர் மாற்றுவதற்கு காரணங்கள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு , சாதி அல்லது மதம், மாற்றம் போன்றவை காரணமாக பெயர் மாற்றம் செய்வது வழக்கமானதுதான். ஆனால் சில செண்டிமெண்ட்கள், எதிர்கால இலக்குகள் வெற்றிபெற எண் கணித அடிப்படையில் சிலர் பெயர் மாற்றுவார்கள்.

“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

இப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை முன்வைத்து அதிமுக அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் பெயரை மாற்றியுள்ளார். இதைக் குறிப்பிடும் அவரது ஆதரவாளர்கள், எண் கணிதம் அடிப்படையில், ஆங்கிலத்தில், P. Raveendranath Kumar என்பதை Ravindhranath என எழுதும் வகையில் எழுத்துகளை மாற்றியுள்ளார்.
சில எதிர்பார்ப்புகளை கணித்து செண்டிமெண்ட்டாக பெயர் மாற்றியுள்ளதாக அவருடன் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அந்த பட்டியலில் தனது மகனின் பெயரையும் சேர்த்துவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தீவிர முயற்சிகளை நடத்தி வருவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகும். ஆனால் கடந்த இரண்டு முறை விரிவாக்கத்தின்போதும் அது நடக்கவில்லை.

“பெயர் மாற்ற செண்டிமெண்ட்”- ரவீந்திரநாத் ஏக்கம் தீருமா ?

கோயில் கோயிலாக சுற்றினாலும், குலதெய்வம், குடமுழுக்கு என செலவு செய்தாலும் நினைத்தது நடந்தபாடில்லை. இந்த சூழலில்தான் நியூமாராலஜி ஆலோசனைப்படி ரவீந்திரநாத் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்.

இந்த பெயர் மாற்ற செண்டிமெண்ட், அவர் நினைத்த வாய்ப்பை கொண்டு வருமா ? என்பது தெரியாது. ஆனால் பெயர் மாறினாலும், டெல்லி லாபியை அப்பாவும், மகனும் கைவிடுவதாக இல்லை என்கிறார்கள் உடன் இருப்பவர்கள். அப்பாவுக்கும், மகனுக்கும் ஏன் இவ்வளவு பகல் கனவோ? என கட்சியினர் புலம்புவது கேட்குமா ?