நடிகர் செந்தில் பெயரிலான போலி ட்விட்டர் கணக்கு நீக்கம்

 

நடிகர் செந்தில் பெயரிலான போலி ட்விட்டர் கணக்கு நீக்கம்

தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக நகைச்சுவை நடிகர் செந்தில் புகாரளித்திருந்த நிலையில், அந்த கணக்குகள் நீக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் செந்தில் பெயரிலான போலி ட்விட்டர் கணக்கு நீக்கம்

தனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கை தொடங்கி டாஸ்மாக் திறப்பது குறித்து தகவலை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல காமெடி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், தனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும் தெரிவித்தார். தனது பெயரில் விஷக் கிருமிகள் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் துவங்கியுள்ளதை தனது நண்பர்கள் மூலம் அறிந்ததாகவும், டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கு வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திடம் முறையிட்டனர். இதனையடுத்து நடிகர் செந்தில் பெயரிலான போலி கணக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. போலி ட்விட்டர் கணக்கைத் தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறையாக ஆராயாமல் இதுபோன்ற போலி கணக்குகளை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.