தேர்தல் ஆணையத்திற்கு திடீர் லெட்டர் அனுப்பிய செந்தில் பாலாஜி… கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு!

தேர்தல் ஆணையத்திற்கு திடீர் லெட்டர் அனுப்பிய செந்தில் பாலாஜி… கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு!

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்துமுடிந்தது. தேர்தல் நடந்துமுடிந்ததும் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுக்காப்பான மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 24 மணி நேர கண்காணிப்பிற்காக ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு எண்ணும் நாள் மே 2 என்பதால் அதுவரை தொண்டர்களும் நிர்வாகிகளும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளைப் பாதுகாக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையத்திற்கு திடீர் லெட்டர் அனுப்பிய செந்தில் பாலாஜி… கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு!

இச்சூழலில் தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அனுப்பியுள்ள புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்புகாரில், “கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் நடந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

தேர்தல் ஆணையத்திற்கு திடீர் லெட்டர் அனுப்பிய செந்தில் பாலாஜி… கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு!

அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் பின்புறம் உள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. மேலும் பாதுகாப்புக்கு காவலர்களும் இல்லை.

தேர்தல் ஆணையத்திற்கு திடீர் லெட்டர் அனுப்பிய செந்தில் பாலாஜி… கரூரில் உச்சக்கட்ட பரபரப்பு!

இதனால் பின்புறம் வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்த வாய்ப்புள்ளது. பாதுகாப்பு அறைகளின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை மேலும் அதிகரித்து சுழற்சி முறையில் 3 கட்டமாகப் பணியமர்த்தி பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.