ஒரு சிலரின் தவறால் அனைத்து மருத்துவமனைகளையும் குறைகூற முடியாது – அமைச்சர் செந்தில் பாலாஜி

 

ஒரு சிலரின் தவறால் அனைத்து மருத்துவமனைகளையும் குறைகூற முடியாது – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சித்தமருத்துவ பிரிவு மையத்தை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மூன்று நிலைகளாக நோயாளிகளை பிரித்திருப்பதாக தெரிவித்தார்.

ஒரு சிலரின் தவறால் அனைத்து மருத்துவமனைகளையும் குறைகூற முடியாது – அமைச்சர் செந்தில் பாலாஜி

வீட்டில் தனி அறை இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் அப்படி இல்லாதவர்களுக்கு கொரோனா மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு 8 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாம் நிலையாக அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு சிலரின் தவறால் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் குறைகூற முடியாது. உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் மாடுலர் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், மின் ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.