செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி : வெற்றி யாருக்கு?

செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி : வெற்றி யாருக்கு?

கரூர் தொகுதியில் திமுக செந்தில் பாலாஜி – அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி : வெற்றி யாருக்கு?

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் ,அதிமுக கூட்டணி 77 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக ,விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி : வெற்றி யாருக்கு?

இந்நிலையில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி – அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.தற்போதைய நிலவரப்படி செந்தில் பாலாஜி 261 வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார். செந்தில் பாலாஜி 28, 850 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 28,589 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

செந்தில் பாலாஜி – விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி : வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் திமுக 124 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் திமுக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே, ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.