அமைச்சருடன் செந்தில் பாலாஜி மோதல் : ரத்தக்களரியான கரூர்!!

 

அமைச்சருடன் செந்தில் பாலாஜி மோதல் : ரத்தக்களரியான கரூர்!!

கரூரில் திமுக – அதிமுக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அமைச்சருடன் செந்தில் பாலாஜி மோதல் : ரத்தக்களரியான கரூர்!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவை விமர்சித்து திமுகவும், திமுகவை அதிமுகவும் விமர்சித்து வருகிறது. அதிமுக கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற போராடி வரும் நிலையில் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் பாலாஜியும் களமிறங்கியுள்ளனர்.

அமைச்சருடன் செந்தில் பாலாஜி மோதல் : ரத்தக்களரியான கரூர்!!

இந்நிலையில் கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து சென்ற போது அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்களிடம் வாக்கு சேகரித்து சென்றதாக திமுக புகார் அளித்தது. திமுகவினரும், அதிமுகவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கரூர் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், செந்தில் பாலாஜிக்கு மோதல் போக்காகவே உள்ளது. கரூரில் வெற்றிபெறுவது தங்கள் கௌரவ பிரச்சனை என்ற ரீதியில் இருவரும் போட்டி போடுகின்றனர். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போதே இருந்து வந்த மோதல் தற்போது எதிர்க்கட்சி என்பதால் இன்னும் அதிகரித்துள்ளதாம்.இதனால் கரூர் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கிறது.