பட்ஜெட் தாக்கல் எதிரொலி: எழுச்சியடையும் பங்குச்சந்தை!

 

பட்ஜெட் தாக்கல் எதிரொலி: எழுச்சியடையும் பங்குச்சந்தை!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் எதிரொலி: எழுச்சியடையும் பங்குச்சந்தை!

வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் 292 புள்ளிகள் அதிகரித்து 46,578 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 59 புள்ளிகள் அதிகரித்து 13,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கல் எதிரொலி: எழுச்சியடையும் பங்குச்சந்தை!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை தற்போது மேலும் உயர்வைச் சந்தித்திருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின் சென்செக்ஸ் 1,690 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் 3,500 புள்ளிகள் சரிந்து பங்குச்சந்தை தற்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியில் எவ்விதமான தளர்வுகளை அறிவிக்காத போதிலும், புதிய வரிகளை விதிக்காதது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அளித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் குறியீடு 1,690 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. நிஃப்டி குறியீடு 498 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.